யாழ்

யாழ்.நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கோட்டாவுக்கு மீண்டும் அழைப்பாணை!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவை எதிர்வரும் ஜூன் மாதம் 21ம் திகதி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மீண்டும் அழைப்பாணை வௌியிடப்பட்டுள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் திகதி லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சாட்சி வழங்க முன்னாள் பாதுகாப்பு செயலாளர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.

இன்றைய தினம் குறித்த வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது கோட்டாபய ராஜபக்‌ஸ நீதிமன்றில் முன்னிலையாகாத நிலையில் அவர் சார்பில் அவரின் சட்டத்தரணி முன்னிலையாகியிருந்தார்.

இதன்போது , தமது கட்சிக்காரர் அடுத்த தவணையில் மன்றில் முற்படுவார் என்று அவர் குறிப்பிட்டிருந்த நிலையில், அதற்காக மாற்று தினத்தை பெற்றுக் கொடுக்குமாறு அவர் கோரியுள்ளார்.

அதன்படி , முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவை எதிர்வரும் ஜூன் மாதம் 21ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை வௌியிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …