தென் மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் இலங்கைக்கு தென்கிழக்கில் குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
இதன் காரணமாக கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு அந்த நிலையம் வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் , நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
சப்ரகமுவ, மத்திய, தென், மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ளுமாறு வானிலை அவதான நிலையம் பொதுமக்களை கோரியுள்ளது.