நாட்டின் பாதுகாப்பு பிரிவு, குழுவாக செயற்படாத காரணத்தினாலேயே பயங்கரவாத தாக்குதலுக்கு நாடு முகம் கொடுக்க நேர்ந்ததாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நுவரெலியா – கெலகொல பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
நாட்டை பாதுகாக்க வேண்டிய கடமை பாதுகாப்பு தரப்புக்கே உள்ளது.
பாதுகாப்புத் தரப்பின் தலைமைகளுக்கு இடையில் பிணக்குகள் இருந்தால், குழுவாக செயற்பட முடியாத நிலைமை ஏற்படும்.
காவற்துறை மா அதிபர், பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கோ, புலனாய்வுத் தலைவருக்கோ கதைக்க முடியாத நிலைமை இருந்தால், அது நாட்டுக்கே பாரிய பிரச்சினையை ஏற்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார்