பிரதமர்

நாட்டின் பாதுகாப்பு குறித்து பிரதமர் தலைமையில் இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடல்கள்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

குருநாகல் மற்றும் கம்பஹா பகுதிகளில் நேற்று இடம்பெற்ற அமைதியற்ற நிலைமையை பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்கள் அலரி மாளிகை மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளன.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர், காவற்துறை மா அதிபர், முப்படைகளின் கூட்டு பிரதானி ஆகியோர் கலந்துகொண்டனர்.

அசம்பாவிதங்கள் நடைபெற்ற பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக இராணுவம் உள்ளிட்ட முப்படை வீரர்களை கடமையில் ஈடுபடுத்துவதற்கும் அவசரகால சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுப்பது குறித்து இதன்போது ஆராயப்பட்டன.

அதனை தொடர்ந்து, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பிரதமர் தலைமையில் பிரிதொரு கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன உள்ளிட்ட அமைச்சர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முப்படைகளின் கூட்டுத் தலைமை பொறுப்பதிகாரி, முப்படைத் தளபதிகள், காவற்துறை மா அதிபர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பல இடங்களிலிருந்து கிடைக்கபெறும் தகவல்களை திரட்டி, அதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …