ஜனாதிபதி வாழ்த்து

நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவிப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இந்திய பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இந்திய பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து செய்தி ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

நரேந்திர மோடியினால் முன்னெடுக்கப்பட்ட கொள்கைகள் தொடர்பில் இந்திய மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடே இந்த வெற்றி என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த கால ஆட்சி காலத்தில் இந்தியா பல வெற்றிகளை அடைந்துள்ளதாகவும் பல்வேறு சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார மறுசீரமைப்புகள் இடம்பெற்றுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்டைய நாடான இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையே வலுவான நட்புறவு பேணப்பட்டு வருவதுடன், எதிர்காலத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு தொடர்புகளை மேலும் பலப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உலகின் பலமான பொருளாதாரத்தைக் கொண்டுள்ள இந்தியா, இந்து சமுத்திர வலயத்தின் வளர்ச்சிக்காக முக்கிய பங்கை ஆற்றிவருவதுடன், அந்த எண்ணங்கள் வெற்றியடைவதற்கு இலங்கை இந்தியாவுடன் நெருங்கி செயற்படுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நடந்து முடிந்த இந்திய பொதுத் தேர்தலில் இரண்டாவது முறையாகவும் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள நரேந்திர மோடிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

இந்திய மக்களிற்கு தொடர்ந்தும் அயராது சேவையாற்றும் தங்களிற்கும் தங்கள் அரசாங்கத்திற்கும் தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலங்களில் இலங்கையின் தேசிய பிரச்சினைக்கு நிறைவான நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையிலான ஒரு நிரந்தர தீர்வினை எட்டும் முகமாகவும் மேலும் தெற்காசிய பிராந்தியத்தில் சமாதான முன்னேற்றத்தினையும் ஸ்திரத்தன்மையினையும் நிலைநாட்டும் முகமாகவும் மிகநெருங்கி செயலாற்ற வேண்டும் என இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …