கடந்த 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட் தீவிரவாத தாக்குதல் தொடர்பில் சவுதி அரேபியா அறிந்திருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அல்-அஹெட் இணையத்தளம் இதனை சுட்டிக்காட்டியுள்ளது.
சவுதி அரேபிய வௌிவிவகார அமைச்சினால் இலங்கைக்கான சவுதி அரேபியாவின் வௌிவிவகார அமைச்சர் இப்ராஹிம் பின் அப்துல் ஹசீஸ் அல் அசாஃப்-இனால் இலங்கைக்கான சவுதி அரேபியத் தூதுவர் அப்துல் நாசர் அல் ஹரேதிக்கு குறித்த இரகசியக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அல்-அஹெட் இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.
சவுதி அரேபியாவின் வௌிவிவகார அமைச்சர் முக்கிய விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கான அந்நாட்டுத் தூதுவரின் கவனத்திற்குக் கொண்டுவந்ததாக குறித்த இரகசியக் கடிதத்தை மேற்கோள்காட்டி அல்-அஹெட் இணையத்தளம் செய்தி வௌியிட்டுள்ளது.
மக்கள் அதிகளவில் சஞ்சரிக்கும் மதஸ்தலங்கள் போன்ற இடங்களை எதிர்வரும் சில நாட்களுக்கு தவிர்க்குமாறும், விசேடமாக உயிர்த்த ஞாயிறு தினத்தில் மக்கள் அதிகளவில் சஞ்சரிக்கும் இடங்களுக்கு செல்லாதிருக்குமாறும் இலங்கைக்கான சவுதி தூதரகத்தின் பாதுகாப்பு நடவடிக்கையுடன் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளுக்கும் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கும் அறிவிக்குமாறும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.