பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
தீவிரவாதிகளை நிச்சயம் தோல்வியடைய செய்வேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்றைய தினம் வர்த்தகர்களை சந்தித்த போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலா தொழில்துறையுடன் தொடர்புடைய வணிகம், விருந்தகம் உள்ளிட்ட சில துறைகளை சார்ந்த வர்த்தகர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.