கோட்டாபய
கோத்தபாய ராஜபக்ச

தாக்குதல் குறித்த கோத்தபாயவின் கருத்து என்ன?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இலங்கையின் புலனாய்வு துறையை சர்வதேச தரத்திற்கு உயர்த்தி அனைத்து இலங்கையர்களிற்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்திய இலங்கையின் பெருமை மிக்க வரலாறு அழிக்கப்படுவது குறித்து அதிர்ச்சியடைந்துள்ளதாக  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்

மிகவும் உணர்வுபூர்வமான தினமான உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களை கண்டிக்கவேண்டியது நாகரீகம் மிக்க சமூகமொன்றின் முக்கிய கடமையாகும் என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்

நாங்கள் இந்த கோழைத்தனமான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை வெறுப்புடண் அணுகவேண்டும் என  கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முப்பது வருட யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர் சுதந்திரமாக சுவாசித்த  இலங்கை மக்களின்  இதயதுடிப்பை இந்த தாக்குதல்கள் இடைநிறுத்தியுள்ளன எனவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்

பயங்கரவாதம் பல்வேறு வடிவங்களில் வந்தாலும் அது ஈவிரக்கமற்றதாக காணப்படும் என்பதை இந்த தாக்குதல்கள் வெளிப்படுத்தியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

நான் அதிர்ச்சியடைந்துள்ளதுடன் துயரமடைந்துள்ளேன் என தெரிவித்துள்ள கோத்தபாய ராஜபக்ச தேசத்திற்கு எதிரான சக்திகளிற்கு எதிராக  தேசக்கொடியின் கீழ் ஐக்கியப்படவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …