பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
நாடு பூராகவும் நேற்று இரவு 10 மணி முதல் அமுல்படுத்தப்பட்ட காவற்துறை ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை நான்கு மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகளை கருத்திற் கொண்டு காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.
இதனிடையே, சம்மாந்துறை, கல்முனை மற்றும் சவலக்கடை ஆகிய காவற்துறை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த காவற்துறை ஊரடங்கு சட்டம் தொடர்வதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.