ஜெயிச்சா மட்டும் போதுமா

ஜெயிச்சா மட்டும் போதுமா? என்ன செய்ய போகிறார் திருமா?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக நாடு முழுவதும் பல இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மைக்கு அதிகமாகவே தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.

ஆனாலும் அவர்களால் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை.

தமிழகத்தின் பல பகுதிகளின் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக உற்றுநோக்கப்பட்டது. அதில் சிதம்பரம் தொகுதியும் ஒன்று.

திமுக கூட்டணி கட்சி சார்பில் அங்கு போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கும், அதிமுக வேட்பாளர் சந்திரசேகருக்கும் வக்கு எண்ணிக்கையில் சொற்ப அளவிலேயே வேறுபாடுகள் இருந்ததால் தொடர்ந்து முன்னிலை பெறுவது மாறிக்கொண்டே இருந்தது.

தமிழ்நாட்டில் தலித்துகளுக்கான உரிமைகளும் ,வாக்கு அரசியலும் வளர்ந்து வரும் நேரத்தில் திருமா-வின் வெற்றி என்பது பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருக்கும் ஒன்றாகும்.

கடைசியாக 3219 வாக்கு வித்தியாசத்தில் திருமாவளவன் வெற்றி பெற்றார்.

இது குறித்து தனது பாராட்டுகளை டிவிட்டரில் வெளியிட்ட இயக்குனர் பா.ரஞ்சித் “மகிழ்ச்சி !!

இந்த வார்த்தையில் அண்ணன் #திருமா வெற்றியை அளவிடவே முடியாது, அதே போல் வேர்எவர் வெற்றியுடனும்ஒப்பிடமுடியாது !

மிக சுலபமாக அலங்கரிக்கப்பட்ட சின்னத்தில் நின்று வெற்றிபெற்றிருக்க முடியும்!

ஆனால் ப்போதும் நமக்கு புறக்கணிக்க முடியாத வெற்றி அவசியமாய் இருக்கிறது! ஜெய் பீம்!!” என்று கூறியிருக்கிறார்.

திருமாவளவன் மக்களவை உறுப்பினராக வெற்றிபெறுவது இது இரண்டாவது முறையாகும்.

2009ல் இதே சிதம்பரத்தில் வெற்றிபெற்று முதல்முறையாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/beemji/status/1131693157211525121

About அருள்

Check Also

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!8Sharesதமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க …