ஜனாதிபதியை

ஜனாதிபதியை சந்தித்த முஸ்லிம் அமைச்சர்கள்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முஸ்லிம் அமைச்சர்கள் சிலருக்கும் இடையே நேற்றைய தினம் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், முஸ்லிம்கள் முகம் கொடுத்துள்ள பல பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் எமது செய்தி பிரிவிடம் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் ஆசிரியர்கள், அரசாங்க அதிகாரிகள், பாடசாலைகள் மற்றும் பணி இடங்களுக்கு வரும் வேளையில் பயன்படுத்தும் ஆடைகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் இதன்போது ஜனாதிபதியின் கவனத்திற் கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் மற்றும் வியடத்திற்கு உரிய அமைச்சரும் அது குறித்த சுற்றுநிருபத்தை விநியோகிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …