பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
சம்மாந்துறை , கல்முனை மற்றும் சவளக்கடை பிரதேசங்களில் அமுலில் உள்ள காவற்துறை ஊரடங்கு சட்டம் இன்று காலை 8 மணியுடன் நீக்கப்படும் என காவற்துறை ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதிகளுக்கு நேற்று மாலை 5 மணிமுதல் மறுஅறிவித்தல் வரை காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டிருந்து.
எவ்வாறாயினும் , நேற்றைய தினம் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.