இந்தியா

குண்டு வெடிப்புக்கள் – தற்கொலை குண்டுத் தாக்குதல் என உறுதி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

கொழும்பில், தேவாலயம் மற்றும் விருந்தகங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்கள் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அரச பகுப்பாய்வு நிறுவனம் இந்த உறுதிப்படுத்தலை வெளியிட்டுள்ளது.

கொழும்பு – கொட்டாஞ்சேனை – கொச்சிக்கடை தேவாலயம் மற்றும் நீர்கொழும்பு – கட்டான – கட்டுவாபிட்டிய தேவாலயம், மற்றும் மட்டக்களப்பு ஸீயோன் தேவாலயம், கொழும்பு சங்ரிலா, கிங்ஸ்பெரி மற்றும் கொள்ளுப்பிட்டியில் உள்ள சினமன் கிரேன்ட் முதலான விருந்தகங்களில் நேற்று காலை 8.45 முதல் 9.30 வரையில் வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகின.

பின்னர், 1.45 அளவில், தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு முன்னால் உள்ள உணவகம் ஒன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்று பதிவானது.

குறித்த வெடிப்புச் சம்பவத்தில் இரண்டு பேர் பலியாகினர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தெமட்டகொடயிலும் குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றன.

இதேவேளை, குண்டு வெடிப்பு சம்பவங்களில் இதுவரை 290 பேர் பலியாகியுள்ளதுடன், 500 பேர் வரை காயமடைந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், காவற்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

LIVE UPDATES : குண்டுவெடிப்பு தொடர்பான செய்திகள்

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …