உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையின் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தாக்கதல்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கவலை தெரிவித்துள்ளார்.
நேற்று பிற்பகல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டு, ட்ரம்ப் தனது கவலையை வெளியிட்டுள்ளார்.
இந்தச் சந்தரப்பத்தில், இலங்கைக்கு அமெரிக்காவின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயார் என்றும் அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் விசேட தொலைபேசி உரையாடலொன்றை மேற்கொண்டார்.
இலங்கை முகம்கொடுத்துள்ள துன்பியல் சம்பவம் தொடர்பில் தனிப்பட்ட முறையிலும், இந்திய அரசாங்கத்தின் சார்பிலும் ஜனாதிபதியிடம் தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார்.
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு தேவையான எந்தவொரு உதவியையும் இலங்கைக்கு வழங்க தாம் தயாராகவுள்ளதாகவும் இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் இந்திய அரசாங்கமும் மக்களும் இலங்கையின் சகோதர மக்களுடனும் அரசாங்கத்துடனும் கைகோர்த்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு தொடர்ந்தும் பலமாக முன்னெடுக்கப்படும் என்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.