இஸ்லாமிய அடைப்படைவாதத்தை கற்பிக்கும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள, அரபு மொழி பாடசாலைகள் மற்றும் மதராசா பாடசாலைகள் என்பன கல்வி அமைச்சின் கீழ் இயங்கவில்லை என அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் குறித்த பாடசாலைகள் கல்வி அமைச்சின் கீழ் இயங்கியதாகவும், அவற்றில் அடிப்படைவாதம் கற்பிக்கப்பட்டமைக்கு கல்வி அமைச்சே பொறுப்பு கூறவேண்டும் எனவும், தெரிவிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையிலேயே குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது