கல்லறையில் என் கண்ணீர்

கல்லறையில் என் கண்ணீர்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

” கல்லறையில் என் கண்ணீர்….”

வண்ண வண்ண பூவே நீ
வாசம் வீச வருவாயோ….
வாடகையின்றி என்
வாடாத பூவாய் நீ……

வாழ்க்கை எனும் ஓடத்திலே
வாழ்ந்து வந்த வேளையிலே
வாழ்விழந்த வினோதமாய்
வானுயரும் காலமிதே……

பூவிழி ஓரமாய் நீயும்
பூங்காற்றில் அசையுமே
பூவே உன் திருமுகத்தை
பூத்தாயே என் பூவிதழ்லே

பூவிழந்த கொடியாக நானுமே
பூலோகத்தை சுற்றி சுற்றியே
பூவற்றுப் போனதேனோ
பூவே நீ மீண்டும் பூப்பாயா…….

கண் பார்த்த வர்ணம் அதில்
கலையாத என் ஓவியமாய்
காத்திருப்பேன் காலமெதில்
கனிவான உன் நினைவிலே……

கடற்கரை மணல் மீதிலே
கவனமாய் கைபிடித்து நீ
கற்றுத்தந்த பாடமாய் நான்
கரைகின்றேன் கண்ணீரிலே……

காலம் சில கடந்தாலும்
கல்லறையில் என்றும் என்
கண்ணீரில் பூப்பாயா..
கண்ணே என் கல்லறையில்…..

 

 

 

 

நீர்வையூர்,
கவிஞர் த.வினோத்.
யாழ்ப்பாணம்…..

 

About அருள்

Check Also

உன் நினைவிலே நான்

உன் நினைவிலே நான்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!132Shares” உன் நினைவிலே நான்….” உன்னுடன் சேர்ந்தே உயிர் வாழ்ந்திடவே உனக்காகவே நானும் உயிர் வாழ்கின்றேனே…… உன்னை …