அவுஸ்திரேலியாவில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்படும் என்ற எதிர்பார்ப்பிலேயே இலங்கையில் இருந்து ஏதிலிகளாக மீண்டும் சிலர் படகுகளில் செல்ல ஆரம்பித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அவஸ்திரேலிய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.
ஆளும் லிபரல் கட்சியின் அரசாங்கமே ஏதிலிகளுக்கு எதிரான கடுமையான சட்டங்களை அமுலாக்கியுள்ளது.
இதனால் படகுமூலம் செல்கின்றவர்கள் உடனடியாக திருப்பி அனுப்பப்படுவதுடன், அரசியல் அந்தஸ்த்து கோரி விண்ணப்பிக்கின்றவர்கள் நீண்டகாலத்துக்கு தடுத்து வைக்கப்படுகின்றனர்.
அண்மையில் அங்கு நடைபெற்ற தேர்தலில் தொழில்கட்சி வெற்றி பெற்றால், ஏதிலிகளுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகும் என்ற எதிர்பார்ப்பில், ஆட்கடத்தற்காரர்கள் படகுகளை சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா நோக்கி அனுப்பியதாக கூறப்படுகிறது.
எனினும் அவுஸ்திரேலியாவில் ஆட்சி மாற்றம் இடம்பெறவில்லை.
எவ்வாறாயினும், தாங்கள் ஆட்சிக்கு வந்தாலும் ஏதிலிகள் மற்றும் எல்லைப்பாதுகாப்புதொடர்பான கொள்கையை மாற்றிக் கொள்ளப்போவதில்லை என்று தொழில்கட்சியின் தலைவர் பில் சோர்ட்டன் அறிவித்துள்ளார்.
கடந்த தினம் அவுஸ்திரேலியாவிற்கு படகுமூலம் சென்ற 20 பேர் நாடுகடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.