உயிர்த்த ஞாயிறன்று இந்நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக அமெரிக்காவின் எப்.பி.ஐ அதிகாரிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ளது.
தாக்குதல்கள் தொடர்பில் தற்போது இடம்பெற்றுவரும் விசாரணைகளுக்கு ஆதரவு வழங்கியுள்ளதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பேச்சாளர் நென்சி வேன் ஹொன் தெரிவித்துள்ளார்.
தாக்குதல்கள் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கு ஆதரவு வழங்குவதற்காக எஸ்.பி.ஐ மற்றும் இன்டர்போல் அதிகாரிகள் இலங்கை வரவுள்ளதாக இதற்கு முன்னர் அரசாங்க பகுப்பாய்வு திணைக்களம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.