கோத்தபய ராஜபக்ச முன்னிலை
கோட்டாபய ராஜபக்ஷ .

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக கோட்டாபய தெரிவிப்பு!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிட்டு, புலனாய்வுத்துறையை வலுப்படுத்தி, பொதுமக்களை கண்காணிப்பதன் மூலம், இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதம் பரவுவதை தம்மால் தடுக்க முடியும் என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ரொயிட்டர்ஸ் ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

யுத்தக்காலத்தில் தம்மால் கட்டியெழுப்பப்பட்ட தீவிர கண்காணிப்பு கட்டமைப்பையும், புலனாய்வு வலையமைப்பையும் பலவீனப்படுத்தாது இருந்திருந்தால், இவ்வாறான தாக்குதல்களை இந்த அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தி இருக்க முடியும்.

அரசாங்கம் இந்த சூழ்நிலைக்கு தயாராக இருக்கவில்லை.

அதனாலேயே இந்த வலிநிறைந்த சூழ்நிலை உருவாகி இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த சூழ்நிலையில் தாமே 100 சதவீதம் நாட்டுக்கு பொறுத்தமான ஜனாதிபதி வேட்பாளராக இருக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …