உயிர்த்த ஞாயிறு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உயர்நீதிமன்றில் மனு தாக்கல்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

கடந்த ஏப்ரல் 21ம் திகதி நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்கு வழிசமைத்து, காவற்துறை மா அதிபரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் பொதுமக்களின் அடிப்படை உரிமையை மீறி இருப்பதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனு, எதிர்வரும் 31ம் திகதி உயர் நீதிமன்றினால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள காவற்துறை மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் இன்று நீதிமன்றில் முன்னிலையாகி இருக்கவில்லை.

எனினும் அவர்கள் சார்பில் அவர்களது சட்டத்தரணி முன்னிலையானார்.

இந்த தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் குறித்த தகவல்களை முன்கூட்டியே அறிந்திருந்தப் போதும், அவர்கள் இருவரும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் காரணமாக, அவர்கள் குற்றவியல் சட்டம் மற்றும் தண்டனை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்று தெரிவித்து கடந்த வாரம் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

சுற்றுலா வர்த்தகத்துறையைச் சேர்ந்த ஜனக் சிறி விதானகே மற்றும் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் உயிரிழந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சமன் நந்தன சிறிமான்ன ஆகியோரே இந்த மனுக்களை தாக்கல் செய்தனர்.

பிரதிவாதிகளின் செயற்பாடுகளால், அரசியல் யாப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள தங்களது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ள நிலையில், அவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் கோரி இருந்தனர்.

இந்த மனு இன்று உயர்நீதிமன்றில், நீதியரசர்களான புவனேக அலுவிஹார, எல்.ரீ.பி.தெஹிதெனிய மற்றும் ப்ரீதி பத்மன் சூரசேன ஆகியோரால் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்குக்கான அழைப்புக் கடிதம் தமது கட்சிக் காரருக்கு கிடைக்கவில்லை என்றும், பொது ஊடகம் வாயிலாகவே இது குறித்து அறிந்துக் கொண்டதாகவும், காவற்துறை மா அதிபர் பூஜித் ஜெயசுதந்திரவின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் தற்போது காவற்துறை விசாரணை ஆரம்பமாகி இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சமர்ப்பனங்களை கருத்திற் கொண்ட நீதியரசர்கள் ஆயம், பிரதிவாதிகளுக்கான அழைப்புக் கடிதங்களை அவர்களது தனிப்பட்ட முகவரிகளுக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டதுடன், 31ம் திகதி இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும் அறிவித்தது.

இதேவேளை, ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத்தாக்குதல் ஊடாக அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து, இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் இன்று உயர் நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …