உயிரிழந்தவர்களின்

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நாட்டின் 8 இடங்களில் நேற்றைய தினம் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 291 ஆக அதிகரித்துள்ளது.

காவற்துறை ஊடக பேச்சாளரும் காவற்துறை அதியகட்சருமான ருவான் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் 500க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு தேசிய மருத்துவமனையில் தற்போது வரை 115 பேர் தொடந்தும் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவித்துள்ளன.

அவர்களில் 25 பேர் அவசர சிகிச்சை பிரிவில் பெற்று வருவதாக கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர் சமந்தி சமரகோன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 51 பேரின் சடலங்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கபபட்டுள்ளன.

றாகமை மருத்துமனையில் 20 பேர் தொடர்ந்தும் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், 7 பேரின் சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 62 பேர் தொடந்தும் நீர்கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, மட்டக்களப்பு மருத்துவமனையில் இதுவரையில் 57 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 28 என தமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இததேவேளை தெமடகொட – மஹவில பிரதேச வீடு ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த 03 காவற்துறை உத்தியோகத்தர்களினதும் பதவியினை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …