உயிர்த்த ஞாயிறு

உயர்நீதிமன்றத்தின் கருத்தைக் கோருவதற்கு தீர்மானம்.

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் கருத்தைக் கோருவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அடுத்த வாரம் இடம்பெறவுள்ள ஆணைக்குழுவின் கூட்டத்தில் இது குறித்தும், தேர்தலை நடத்துவதற்கான காலம் தொடர்பிலும் சட்ட நிபுணர்களுடன் ஆராயவுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

9 மாகாண சபைகளில் ஊவா மாகாண சபை தவிர்ந்த ஏனைய 8 மாகாண சபைகளின் அதிகார காலம் நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில், மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு உள்ள இயலுமை குறித்து உயர்நீதிமன்றத்தின் கருத்தைக் கோரவுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஊவா மாகாண சபையின் அதிகார காலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் நிறைவுக்கு வரவுள்ளது.

எனினும், மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கட்சித் தலைவர்கள் பலமுறை கூடி ஆராயந்துள்ளபோதும், இதுவரை இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …